/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விரைவில் வடமதுரை தாலுகா காந்திராஜன் எம்.எல்.ஏ., உறுதி
/
விரைவில் வடமதுரை தாலுகா காந்திராஜன் எம்.எல்.ஏ., உறுதி
விரைவில் வடமதுரை தாலுகா காந்திராஜன் எம்.எல்.ஏ., உறுதி
விரைவில் வடமதுரை தாலுகா காந்திராஜன் எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஆக 15, 2024 05:24 AM

வடமதுரை : '' வடமதுரையை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய தாலுகா உருவாகும் ''என காந்திராஜன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
காணப்பாடியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:
குஜிலியம்பாறைக்கு நீதிமன்றம், பள்ளி, மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள், ரோடுகள் பல புதுப்பிக்கப்பட்டுள்ளன.
வடமதுரையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கவும், அய்யலுார் பேரூராட்சியில் கோம்பை பகுதியை பிரித்து ஊராட்சியாக்கவும் அமைச்சர்கள் உறுதி தந்துள்ளனர்.
பஸ் வசதி குறைவு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில் மாவட்டத்திற்கு 45 புதிய பஸ்கள் வந்துள்ளன. படிப்படியாக பஸ் வசதி குறைவு பிரச்னை தீர்க்கப்படும் என்றார்.
தாசில்தார் சரவணக்குமார் தலைமை வகித்தார். ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், ஊராட்சி தலைவர்கள் ராஜாமணி, அங்கம்மாள், விநாயகன் பங்கேற்றனர்.