/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பேக்கரியில் கெட்டுப்போன கேக்,பன்: அபராதம்
/
பேக்கரியில் கெட்டுப்போன கேக்,பன்: அபராதம்
ADDED : ஜூன் 14, 2024 07:11 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பேக்கரியில் தேதி குறிப்பிடாமல் கெட்டுப்போன நிலையில் இருந்த 20 கிலோ கேக்,பன் போன்ற உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகில் தனியார் பேக்கரி செயல்படுகிறது. இங்கு நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த உணவுப் பொருட்கள் தேதி குறிப்பிடாமல் கெட்டுப்போன நிலையிலும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி தலைமையில் பேக்கரியில் ஆய்வில் ஈடுபட்டனர்.
பேக்கரியில் தயாரிக்கப்பட்ட கேக்,பன் போன்ற உணவு பொருட்கள் தேதி குறிப்பிடாமல் கெட்டுப்போன நிலையில் இருந்தது தெரிந்தது.
இதை தொடர்ந்து அங்கிருந்த 20 கிலோ மதிப்பிலான கெட்டுப் போன கேக்,பன் போன்ற உணவுகளை பறிமுதல் செய்து ரூ.3000 அபராதம் விதித்தனர்.