நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; மாநகர ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக இளைஞர் அணி, சத்திய பிரசார பேரவை சார்பாகபோதைக்கு எதிரான விழிப்புணர்வு,மாற்றம் தரும் ரமலான் தெருமுனை பிரசார கூட்டம் பேகம்பூர் மண்டி பள்ளிவாசல் எதிரில் திப்பு திடலில் நடந்தது.
மாநகர செயலாளர் சேக் அப்துல்லா தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் நைனா முகமது, மருத்துவ சேவை அணி செயலாளர் மாஸ்டர் சேக் பரீத், பொருளாளர் சேக், வைகறை தொழிற் சங்க செயலாளர் பாபுஜி முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர்கள் ஜமால் முகமது, அப்துல் ஹாலிக் பங்கேற்றனர். மாநகர தலைவர் சாதிக் அலி நன்றி கூறினார்.