/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இடமாறுதல் கலந்தாய்வை பழைய முறைப்படி நடத்தாவிடில் மறியல்
/
இடமாறுதல் கலந்தாய்வை பழைய முறைப்படி நடத்தாவிடில் மறியல்
இடமாறுதல் கலந்தாய்வை பழைய முறைப்படி நடத்தாவிடில் மறியல்
இடமாறுதல் கலந்தாய்வை பழைய முறைப்படி நடத்தாவிடில் மறியல்
ADDED : மே 17, 2024 06:14 AM
வேடசந்தூர் : ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை பழைய முறைப்படி நடத்தாமல் மாற்றி நடத்தினால், கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் கோபிநாதன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது : 60 ஆண்டாக ஒன்றியம் , மாவட்ட அளவில் நடந்த ஆசிரியர் கலந்தாய்வை மாற்றி மாநில கலந்தாய்வு கூட்டமாக நடத்த தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். மீறி நடத்தினால் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் முன் தொடர் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்றார்.