/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிரியர் தாக்கியதாக மாணவர் புகார்; மருத்துவமனையில் அனுமதி
/
ஆசிரியர் தாக்கியதாக மாணவர் புகார்; மருத்துவமனையில் அனுமதி
ஆசிரியர் தாக்கியதாக மாணவர் புகார்; மருத்துவமனையில் அனுமதி
ஆசிரியர் தாக்கியதாக மாணவர் புகார்; மருத்துவமனையில் அனுமதி
ADDED : பிப் 27, 2025 01:31 AM
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக 8ம் வகுப்பு மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திண்டுக்கல் கரட்டழகன்பட்டியை சேர்ந்தவர் சக்தி மகன் ஜீவித் கண்ணா 13. திண்டுக்கல் மாநகராட்சி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இவர் பஸ் ஸ்டாண்டில் வைத்து அதே பள்ளியை சேர்ந்த சில மாணவர்களுடன் சண்டை போட்டுள்ளார். இதையறிந்த பள்ளி நிர்வாகத்தினர் ஜீவித்கண்ணாவிடம் விசாரணை நடத்தி மன்னிப்பு கடிதம் எழுத அறிவுறுத்தினர். உடற்கல்வி ஆசிரியர் தனசேகரபாண்டியன் அங்கு வந்துள்ளார். அடித்து உதைத்ததாக புகார் கூறி ஜீவித்கண்ணா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வடக்கு போலீசார் விசாரித்தனர்.
நடவடிக்கை வேண்டும்
மாணவரின் தந்தை சக்தி கூறுகையில்''என் மகனை தேவையில்லாமல் உடற்கல்வி ஆசிரியர் ஜாதி பெயரை சொல்லி அவதுாறாக பேசி தாக்கி உள்ளார். இது கண்டிக்கதக்க செயல். கல்வித்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
அடிக்கவில்லை
உடற்கல்வி ஆசிரியர் கூறுகையில்'' மாணவர் ஜீவித்கண்ணா 2024 அக்டோபரில் தன்னுடன் படிக்கும் மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது பெற்றோரை வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க செய்தோம். நேற்று முன்தினம் பஸ் ஸ்டாண்டில் தன்னுடன் படிக்கும் சில மாணவர்களுடன் சண்டை போட்டுள்ளார். இதை தெரிந்து அனைத்து மாணவர்கள் முன்னிலையில் தான் விசாரணை நடத்தினேன். நான் அவரை அடிக்கவில்லை. இது அனைவருக்கும் தெரியும் ''என்றார்.