/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்களை மெருகேற்றும் விழாக்கள் திறமைகளை வெளிகொணற ஓர் வாய்ப்பு
/
மாணவர்களை மெருகேற்றும் விழாக்கள் திறமைகளை வெளிகொணற ஓர் வாய்ப்பு
மாணவர்களை மெருகேற்றும் விழாக்கள் திறமைகளை வெளிகொணற ஓர் வாய்ப்பு
மாணவர்களை மெருகேற்றும் விழாக்கள் திறமைகளை வெளிகொணற ஓர் வாய்ப்பு
ADDED : மார் 02, 2025 05:06 AM

திண்டுக்கல்
ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை பள்ளிகளில் படிக்கும் நேரத்தில் தான் அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும் . அப்படிப்பட்ட திறமை வாய்ந்த மாணவர்களை மெருகேற்றவது தான் பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாக்கள். இதுபோன்ற நிகழ்ச்சி தான் திண்டுக்கல் வேதாந்திரி மகரிஷி பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்துள்ளது. அதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது...
மாணவர்களுக்கு பயம் வேண்டாம்
தாமோதரன்,தாளாளர்: மாணவர்கள் இளம் வயதில் மேடை ஏற பயப்பட வேண்டாம். நம்முடைய திறமைகளை அச்சப்படாமல் வெளிக்கொண்டு வரவேண்டும். கல்வியோடு வாழ்வில் பல கலைகளை தெரிந்து கொள்வதற்கு ஆண்டு விழாக்கள் உதவுகிறது. மாணவர்கள் அகத்தில் இருக்கும் அறிவை புறத்தோடு சேர்ந்து குழந்தைகள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இதை கண்டு ஆச்சர்யபடும் அளவிற்கு இருக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களை கண்டு மனம் மகிழ வேண்டும்.
பன்முகத்திறமை அவசியம்
பூங்குன்றன், சிறப்பு விருந்தினர்: காலத்திற்குகேற்ற கல்வியை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்குகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் வீடாக பள்ளியை நினைக்கின்றனர். மதிப்பெண் முதன்மை என்பதோடு பன்முகத்திறமை மாணவர்களுக்கு அவசியம். இவ்விழாவை பார்க்க வந்த மனித பூக்களால் இவ்விழா அரங்கம் நந்தவனமாக மாறியது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கதை சொல்லி வளர்க்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் ் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மகிழ்ச்சி
அன்னலட்சுமி,பெற்றோர்: பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றது வாழ்வில் மகழ்ச்சியான செயலாக உள்ளது. சிறப்பு விருந்தினர்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு கொடுத்து கவுரவித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
நேர மேலாண்மை கடைபிடிப்பு
ஹரினிகா, பெற்றோர்: ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை இன்முகத்தோடு பார்த்து கொண்டது சிறப்பாக இருந்தது. மழலைகளுக்கு பட்டம் கொடுத்தது இன்னும் அதிகமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேர மேலாண்மையை மிக சரியாக கடை பிடித்ததற்கு நன்றியும், வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
திறமை காட்டும் மேடை
பிரதிக் ஷா,மாணவி: எங்கள் திறமையை எடுத்து காட்டும் மேடையாக இந்த பள்ளி ஆண்டு விழாவை கருதுகிறேன். அதுமட்டுமின்றி எங்கள் மகிழ்ச்சியை பெற்றோர்களிடம் வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக இருந்தது. இந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்த பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி.