/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வறட்சி மாவட்டமாக அறிவித்து இழப்பீடு வழங்குங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ADDED : மே 05, 2024 04:34 AM
திண்டுக்கல், : வரலாறு காணாத கடும் வெயில் காரணமாக வேளாண விளை பொருட்கள் கடும் பாதிப்புக்குள்ளானதால் திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிப்புக்கு ஏற்ற இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, துணைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் தயாளன், துணைச் செயலாளர் அஜாய்கோஷ் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பெருமாள் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மா விவசாயிகளுக்கு ஒரு மரத்திற்கு ரூ. 1000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்கள் காய்ந்து உள்ளன. கொடைக்கானல் பகுதியில் கேரட், பூண்டு, அவரை விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து, கடனாளியாக மாறி உள்ளனர். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.