/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் பேட்டி
/
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் பேட்டி
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் பேட்டி
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் பேட்டி
ADDED : ஆக 06, 2024 04:59 AM
திண்டுக்கல்: '' மத்திய பட்ஜெட்டில் தமிழகம் எந்தவிதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தது கண்டனத்திற்குரியது ''என பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : மத்திய அரசு எந்த ஒரு நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதற்கு ஒரு தவறான கருத்துக்களை கூறி எதிர்ப்பு தெரிவிக்கிற மனப்பான்மை தமிழகத்தில் அதிகம் உள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் ,பட்ஜெட்டில் தமிழகம் பெயரை குறிப்பிடாததால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். தற்போது மட்டுமல்ல 3 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக ஏதோ ஒரு காரணங்களை கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கின்றனர். இது கண்டனத்திற்குரியது.
காங்., ஆட்சியின் போது 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தனர். அதில் 3 முறை மட்டுமே தமிழகத்தின் பெயரை குறிப்பிட்டனர். தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.8454 கோடி ஒதுக்கீடு செய்தனர். ஆனால் பா.ஜ., ஆட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் சிறப்பு நிதியாக ரூ.10,76,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலன திட்டங்கள் தமிழகத்திற்கு பொருந்தும். எந்தவிதத்திலும் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதில்லை.
மேற்கு வங்க முதல்வர் மம்தா நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றாலும் அங்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசாமல் அரசியல் பேசி உள்ளார். ஆனால் அவேரோ பேச நேரம் கொடுக்கவில்லை என கூறுகிறார் என்றார்.