/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரி வசூல் ஓகே ... வசதிகள் இல்லையே! ஏக்கத்தில் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்
/
வரி வசூல் ஓகே ... வசதிகள் இல்லையே! ஏக்கத்தில் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்
வரி வசூல் ஓகே ... வசதிகள் இல்லையே! ஏக்கத்தில் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்
வரி வசூல் ஓகே ... வசதிகள் இல்லையே! ஏக்கத்தில் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்
ADDED : செப் 04, 2024 06:59 AM
திண்டுக்கல் : முறையற்ற ரோடுகள், எங்கும் இல்லை சாக்கடைகள் , நாய்கள், மாடுகள், கொசுக்கள் தொல்லை, தேங்கி நிற்கும் நீரால் நோய்தொற்று என பல்வேறு பிரச்னைகளை கண்டுக்கொள்ளாது வரி வசூலில் மட்டும் உள்ளாட்சிகள் அதிக அக்கறை செலுத்துவதாக திண்டுக்கல் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் - தாடிகொம்பு ரோட்டில் உள்ளது பண்ணை குறிஞ்சி நகர் . இங்குள்ள குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பொறுப்பாளர்கள் மணிகண்டன், அருணாச்சலம், ராமலிங்கம் கூறியதாவது : வளர்ந்து வரும் பகுதிகளாக பண்ணை குறிஞ்சி நகர் சுற்றுவட்டார பகுதிகள் இருந்தும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு வரும் ரோடுகள் சேதமடைந்துள்ளது. குடியிருப்பை சுற்றி எந்த இடத்திலும் சாக்கடைகள் இல்லை. சாக்கடை இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது . இதை சொந்த செலவில் அகற்ற வேண்டியதாய் உள்ளது.
மழை பெய்தால் காலி மனைகள் உட்பட அனைத்து இடங்களிலும் நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. வடிகால்கள் இல்லாததது பெரும் பிரச்னையாக உள்ளது. காலி மனைகளில் தேங்கும் நீரால் கொசு உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. முக்கிய பிரச்னையாக தெரு விளக்குகள் இல்லாததுதான். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விஷப் பூச்சிகள் வருவது தெரிவதில்லை.
குப்பை தொட்டிகள் எங்குமே இல்லை. குப்பை அள்ள எவரும் வருவதில்லை. மாநகராட்சி ஊராட்சி இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் நகர் இருந்தாலும் எவருமே கண்டுகொள்வது இல்லை.
முறையிட்டும் பயனில்லை. 5 கிராம சபை கூட்டங்களிலும் வலியுறுத்தி உள்ளோம். எதுவும் கண்டு கொள்வதில்லை. தனித்தீவில் வசிப்பது போல் உள்ளது. வரிகள் உள்பட அனைத்தையும் வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் வசதிகள் ஏதும் செய்து கொடுப்பதில்லை.
தெரு நாய்கள் , மாடுகள் அதிகம் உலவுகிறது. கொசுத்தொல்லை அதிகமாக குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குடிநீர் குழாய்கள் இல்லை. பொதுக்குழாய் என்ற பேச்சிற்கே இடமில்லை. எல்லாம் சொந்தமாக ஏற்படுத்தினால் மட்டுமே உண்டு என்றனர்.