/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
3 நாட்கள் சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம்
/
3 நாட்கள் சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 18, 2024 07:19 AM
வேடசந்துார் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் மாவட்டங்கள் வாரியாக ஆசிரியர்கள் மூன்று நாட்கள் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.
60 ஆண்டுகளாக தொடக்கக் கல்வித் துறையில் நடைமுறையில் இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாநில முன்னுரிமையாக மாற்றியமைத்து கலந்தாய்வு நடத்திய தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்தும், அதை திரும்பக் பெற வலியுறுத்தியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29ல் புதுக்கோட்டை, திருவாரூர், விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், வேலுார், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட அமைப்பினரும்.
ஜூலை 30 ல் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, திருப்பத்துார், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட அமைப்பினரும் ஜூலை 31ல் தேனி, சிவகங்கை, துாத்துக்குடி, கரூர், பெரம்பலுார், அரியலுார், நாகப்பட்டினம், கடலுார், சேலம், கோவை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட அமைப்பினரும் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.