ADDED : மே 30, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள்நடந்தது. ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலுள்ள வள்ளி தேவசேனா சுப்பிரணிய சுவாமிக்குபால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதனைகாட்டப்பட்டது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, பாதாள செம்பு முருகன் கோயில்களில் அபிஷேகம் நடந்தது.