ADDED : மே 10, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட் எதிரே கோவையிலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் இறங்கியது.
ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி தங்கச்சியம்மாபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது.
இதனால் ரோட்டில் மழை நீர் ஓடியது. கோவையிலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் தங்கச்சி அம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.
நல்ல வாய்ப்பாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு இம்மழையினால் சற்று ஆறுதல் அடைந்தனர்.