/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கையில் நீடிக்கும் பிரச்னை விண்ணப்பிக்க முடியாமல் பெற்றோர் அலைக்கழிப்பு

ADDED : மே 03, 2024 06:33 AM
ரெட்டியார்சத்திரம்: விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க லாகின், பாஸ்வேர்டு தகவல் கிடைக்கவில்லை. அலைக்கழிப்பு மட்டுமே தொடர்வதால் விண்ணப்பதாரரின் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விடுதிகளில் தங்கி படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர்கள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இதற்காக இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பலரும் தனியார் சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க முயன்றனர். சில நாட்களாக விண்ணப்பிப்போரின் முதன்மை விபரங்கள் மட்டுமே பெறப்பட்டு கட்டண வசூல் நிலை வரை செல்கிறது. விண்ணப்பித்தாருக்கான லாகின் ஐ.டி, பாஸ்வேர்டு இருந்தால் மட்டுமே கூடுதல் விபரங்களை பதிவேற்ற முடியும். ஆனால் இந்த விபரங்கள் அலைபேசி குறுஞ்செய்தியாகவோ, மெயிலிலோ கிடைக்கவில்லை.
மே 8 வரை மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் முழுமையாக விண்ணப்பிக்க முடியாமல் பலர் அலைக்கழிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். பெற்றோர், விண்ணப்பதாரரின் அதிருப்தி நீடிக்கிறது.