/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வினாக்கள் எளிது... 100 மதிப்பெண் உறுதி பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
/
வினாக்கள் எளிது... 100 மதிப்பெண் உறுதி பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
வினாக்கள் எளிது... 100 மதிப்பெண் உறுதி பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
வினாக்கள் எளிது... 100 மதிப்பெண் உறுதி பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 07, 2025 02:03 AM

திண்டுக்கல்:'பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எளிதாக இருந்ததால் அதிகமானோர் 100க்கு 100 மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளதாக,' திண்டுக்கல் மாவட்ட மாணவர்கள் மகிழ்ச்சியோடு கூறினர்.
அவர்கள் கூறியதாவது....
அதிக மதிப்பெண் உறுதி
ஆகாஷ், பாரத் வித்யா பவன் மெட்ரிக் பள்ளி, பழநி: ஒரு மதிப்பெண் வினாக்கள் படித்ததிலிருந்து கேள்விகளிலிருந்து கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்கள் சுயமாக யோசித்து எழுத வேண்டியதாக இருந்தன. 5 மதிப்பெண் வினாக்கள் ஒரு நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கும் கேள்வியாக இருந்தது.
இதை எழுதுவது எளிதாக இருந்தது. நண்பர்கள் கலந்தாலோசித்த கேள்விகள் வந்துள்ளதால் ஆங்கில தேர்வு எளிதாக இருந்தது. சாய்ஸ் கேள்விகளை தேர்ந்தெடுப்பதும் எளிதாக இருந்தது. ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி படித்திருந்தால் அதிக மதிப்பெண் பெறுவது எளிது.
3 மதிப்பெண் வினா சிரமமே
எஸ்.ஷிவானி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேடசந்துார்: ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று சிரமமாக இருந்தன. இரண்டு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்கள் சற்று சிரமம் தான். ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன.
ஆசிரியை முக்கியமானது என குறித்து கொடுத்த கேள்விகள் வந்ததால் எளிதாக எழுதினோம். அதிக மதிப்பெண் எடுப்போம்.
படித்திருந்தால் எளிதில் வெற்றி
எஸ்.ருத்ரேஷ் கண்ணா, விவேகானந்தா வித்யாலயா பள்ளி, காளாஞ்சிபட்டி: வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன. 20 ஒரு மதிப்பெண் வினாக்களில் மூன்று வினாக்கள் மட்டும் சிந்தித்து எழுதும்படி கேட்கப்பட்டிருந்தன. இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. சாய்ஸ் இல்லாமல் கேட்கப்பட்ட ஐந்து மதிப்பெண் வினாக்களில் சில புரிந்து எழுதும்படி இருந்தன. புக் பேக் வினாக்களை படித்து இருந்தாலே ஆங்கிலத்தில் எளிதாக தேர்ச்சி அடையலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும்.
மகிழ்ச்சியடைந்தோம்
வீரநேத்ரா, விவேகனந்த வித்யாலாயா மெட்ரிக் பள்ளி, பண்ணைக்காடு: ஆங்கில தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்தது. மற்றபடி ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தப் போதும் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தியதால் புரிந்து கொண்டு பதிலளித்தேன்.
வினாத்தாளை பார்த்தவுடன் அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியடைந்தோம். கூடுதல் மதிப்பெண் பெறுவது எளிதாகும்.
எளிமையாக இருந்தது
அங்குராஜ், ஆங்கில ஆசிரியர், அச்யுதா மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்: தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் முழுவதும் 2021, 2022, 2023 ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களாக இருந்தன. இதில் 85 சதவீத வினாக்கள் பாட புத்தகங்களில் இருந்து வந்திருந்தன. மாணவர்கள் தெளிவாக தேர்வை எழுதி உள்ளனர்.
2024ல் நடந்த ஆங்கிலத்தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததால் பல மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற முடியவில்லை. இந்தாண்டு அதிகமானோர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புள்ளது. கிராமர், இ.ஆர்.சி., வினாக்கள் அனைத்தும் பாட புத்தகத்திலிருந்து வந்துள்ளன.
3 மதிப்பெண்ணில் கேட்கப்பட்ட சுலோகன் ரைட்டிங் மட்டும் 12ம் வகுப்பு பாட திட்டத்தில் இல்லாதது.