/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காதல் திருமணம் செய்த சிறிது நேரத்தில் டூவீலர் திருட்டு வழக்கில் சிக்கிய வாலிபர்

ADDED : ஜூன் 26, 2024 07:01 AM
வடமதுரை : காதல் திருமணம் செய்த சிறிது நேரத்தில் போலீசார் வாலிபரை டூவீலர் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.
வடமதுரை ஓம் சக்தி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வசந்த் 22. உடுமலைப்பேட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவியை காதலித்தார். பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் நேற்று காலை வடமதுரை கோயில் ஒன்றில் திருமணம் செய்தார் .
இதன் பின் பாதுகாப்பு கோரி மகளிர் போலீசில் தஞ்சமடைய டூவீலரில் புறப்பட்டார். அவ்வழியே வந்த விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் டூவீலரை மறித்து நிறுத்தினர். வசந்தை கைது செய்து வடமதுரை போலீசில் ஆஜர் செய்து விருதுநகருக்கு அழைத்து சென்றனர். விஷயம் தெரியாமல் காதல் மனைவி,பொதுமக்கள் திகைத்த நிலையில்,வசந்த் விருதுநகரில் டூவீலரை திருடியதால் அவரை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் வந்தது தெரிந்தது. காதல் மனைவியை மகளிர் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.