/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கணவரை பழிவாங்க ஸ்கெட்ச் போட்ட மனைவி; மூவர் கைது
/
கணவரை பழிவாங்க ஸ்கெட்ச் போட்ட மனைவி; மூவர் கைது
ADDED : ஆக 09, 2024 12:52 AM
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் கணவரை பழிவாங்க அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த டூவீலரை ஸ்கெட்ச் போட்டு திருடிய மனைவி தலைமறைவான நிலையில் ,மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் எழில்மாறன். சித்தரேவு ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார்.
எழில் மாறன் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பட்டிவீரன்பட்டி போலீஸ் விசாரணையில் தன்னை பிரிந்து சென்ற கணவர் எழில் மாறன் விலை உயர்ந்த டூவீலரில் ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்து கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி, உறவினர்கள் உதவியுடன் டூவீலரை திருடியது தெரிந்தது.
இதையடுத்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எழில் மாறனின் டூ வீலரை கைப்பற்றிய போலீசார் திருட்டில் தொடர்புடைய பாலயோகி, பிரகாஷ், காயத்ரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். ஜெயலட்சுமியை தேடி வருகின்றனர்.