/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது அமைச்சர் பெரியசாமி திட்ட வட்டம்
/
பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது அமைச்சர் பெரியசாமி திட்ட வட்டம்
பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது அமைச்சர் பெரியசாமி திட்ட வட்டம்
பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது அமைச்சர் பெரியசாமி திட்ட வட்டம்
ADDED : ஆக 22, 2024 03:43 AM
திண்டுக்கல்: ''பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது கண்டிப்பாக கிடையாது ''என அமைச்சர் பெரியசாமி கூறினார்.
திண்டுக்கலில் 5 நகர்ப்புறம், 53 புதிய புறநகர், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய வழித்தடத்தில் ஒன்று என 59 புதிய பஸ் சேவைகளை திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்டிலிருந்து அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் சச்சிதானந்தம் (திண்டுக்கல் ) தங்க தமிழ்ச்செல்வன் (தேனி) எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார்(பழநி ) காந்திராஜன் (வேடசந்துார்) சரவணக்குமார் ( பெரியகுளம்) மகாராஜன் (ஆண்டிப்பட்டி) மேயர் இளமதி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன், துணை மேயர் ராஜப்பா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜா, அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை மண்டல மேலாண்மை இயக்குநர் .சிங்காரவேலு, கோட்ட பொது மேலாளர் சசிகுமார் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பெரியசாமி பேசுகையில்,'' பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் குக்கிராமங்களுக்கும் பஸ் வசதியை ஏற்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.இந்தியாவிலே ஜி.எஸ்.டி., செலுத்துவதில் 4வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் அதற்குரிய நிதி ஆதாரங்கள் தமிழகத்திற்கு வந்து சேருவது இல்லை '' என்றார்.
இதை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் ''முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவிற்கு பா.ஜ., வை மட்டும் அழைக்கவில்லை.
தோழமைக் கட்சிகள், அ.தி.மு.க., என அனைத்து கட்சிகளையும் அழைத்துள்ளோம். பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது கண்டிப்பாக கிடையாது. அமைச்சரவை மாற்றம் என்பது முதலமைச்சரின் உரிமை என்றார்.