/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் 20 பவுன் நகை கொள்ளையில் மூவர் கைது
/
பழநியில் 20 பவுன் நகை கொள்ளையில் மூவர் கைது
ADDED : ஜூன் 01, 2024 05:45 AM
சாமிநாதபுரம்: பழநி ஜி.வி.ஜி. நகரில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஜி.வி.ஜி. நகரை சேர்ந்த மில் தொழிலாளி தர்மராஜ் 55, வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையிலான போலீசார் வன்னியவலசு பகுதியில் சுற்றித்திரிந்த சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் 25, திருச்சி யாழின்ராஜ் 24, தஞ்சாவூரைச் சேர்ந்த அஜய் பிரவீன் 19, பிடித்து விசாரித்தனர்.
இவர்கள் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது தெரிந்தது.
ஜி.வி.ஜி. நகரில் நடந்த 20 பவுன் நகை கொள்ளையிலும் ஈடுபட்டது தெரிய வர இவர்களை கைது செய்த போலீசார் 20 பவுன் நகைகளையும் மீட்டனர்.