ADDED : மே 10, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செக்கிரியா ஜெயக்குமார்.
இவர் அக்கம்பக்கத்தில் தொழிலுக்காக அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கடனை மீண்டும் செலுத்த முடியவில்லை. இதனால் நேற்று மன உளைச்சலில் தன் வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வடக்கு போலீசார்விசாரிக்கின்றனர்.இதேபோல் திண்டுக்கல் கொட்டப்பட்டி சிவில் சப்ளை காலனியை சேர்ந்தவர் அபிராமி. இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் மன உளைச்சலில் நேற்று தன் வீட்டில் தற்கொலை செய்தார். இதேபோல் திண்டுக்கல் குளத்துார் அண்ணாநகரை சேர்ந்த தொழிலாளி பெத்துராஜ். மன உளைச்சலில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.