/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டோல்கேட் சூறை : 300 பேர் மீது வழக்கு
/
டோல்கேட் சூறை : 300 பேர் மீது வழக்கு
ADDED : மார் 14, 2025 01:41 AM
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி டோல்கேட் சூறையாடிய பிரச்னையில் 300 பேர் மீது பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரூ. 96 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக டோல்கேட் மேலாளரும் புகார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் குமுளி ரோட்டில் சேவுகம்பட்டியில் நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பாக 2021ல் டோல்கேட் அமைக்கப்பட்டது. இருவழிச் சாலையாக இருப்பதால் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் முதல் டோல்கேட் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் டோல்கேட்டை அடித்து நொறுக்கினர். டோல்கேட்டில் ரூ. 96 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகவும், 300 பேர் டோல்கேட்டை சேதப்படுத்தியதாகவும் மேலாளர் பிரவீன் குமார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பட்டிவீரன்பட்டி போலீசார் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.