
ஒட்டன்சத்திரம்: ஆந்திராவில் தக்காளி அறுவடை தீவிரமாக நடப்பதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்து கிலோ ரூ.17 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, கேதையுறும்பு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது பல இடங்களில் அறுவடை செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.30 மேல் விற்பனையானது. தற்போது ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளி அறுவடை மும்முரமாக நடக்கிறது. விலையும் குறைவாக இருப்பதால் வியாபாரிகள் அங்கு சென்று தக்காளியை கொள்முதல் செய்கின்றனர். இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.17 க்கு விற்றது.
கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், ஆந்திராவில் அறுவடை முடிந்த பின்பே தக்காளி விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

