/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
கொடைக்கானலில் மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 09, 2024 11:28 PM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மதியம் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் நடு ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சில மாதங்களாக குளு, குளு நகரான கொடைக்கானலில் தகிக்கும் வெயில் வாட்டி வதைத்தது. இங்குள்ள முக்கிய அருவிகள், நீர் ஆதாரங்கள் வற்றத் தொடங்கியது. அக்னி நட்சத்திர வெயில் துவங்கிய நிலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. நேற்று முன்தினம் மன்னவனுார், பூம்பாறை பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. நேற்று மதியம் கொடைக்கானல் சுற்றுப்பகுதிகளில் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.
அதில் மன்னவனுார் கைகாட்டி பகுதியில் ராட்சத மரம் மதியம் 1:00 மணிக்கு விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்தது. அருகில் இருந்த சில குடியிருப்புகளிலும் மரத்தின் கிளைகள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்நேரத்தில் போக்குவரத்து,கட்டடங்களில் ஆட்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வனத்துறை,உள்ளூர் பொதுமக்கள் மரத்தை அகற்றினர்.