/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு வசதியின்றி பெண் பலி டோலியில் துாக்கி சென்றும் துயரம்
/
ரோடு வசதியின்றி பெண் பலி டோலியில் துாக்கி சென்றும் துயரம்
ரோடு வசதியின்றி பெண் பலி டோலியில் துாக்கி சென்றும் துயரம்
ரோடு வசதியின்றி பெண் பலி டோலியில் துாக்கி சென்றும் துயரம்
ADDED : மார் 14, 2025 02:34 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் ரோடு வசதி இல்லாததால் சிகிச்சைக்கு டோலி கட்டி துாக்கி செல்லப்பட்ட பெண் பலியானார்.
கொடைக்கானலில் உள்ளது வெள்ள கெவி கிராமம். ஆங்கிலேயர்கள் இக்கிராமத்தை கடந்துதான் கொடைக்கானல் வந்தடைந்தனர். கொடைக்கானலுக்கு அடித்தளமிட்ட இவ்வூருக்கு இன்று வரை ரோடு வசதி இல்லை.
2021ல் வட்டக்கானல் வழியே மண் ரோடு அமைக்கும் பணி துவக்கப்பட்டது. ஆனால் முழுமை பெறவில்லை. ரோடு அமைத்து தரப்படும் என எம்.எல்.ஏ., செந்தில்குமார் உறுதியளித்து 4 ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கவில்லை.
வெள்ளகெவி கிராமத்தில் இருந்து கொடைக்கானல் 8. கி.மீ., கும்பக்கரை 8 கி.மீ., ஆனால் ரோடு வசதி கிடையாது. நடந்துதான் செல்ல வேண்டும். கும்பக்கரை வந்து அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பெரியகுளத்திற்கு சென்றுதான் இப்பகுதி மக்கள் சிகிச்சை பெற முடியும்.
இக்கிராமத்தை சேர்ந்த ராம்குமார் மனைவி மேகலா 35. உடல் நலம் பாதிக்க நேற்று முன்தினம் இரவு கிராமத்தினர் கும்பக்கரைக்கு டோலி கட்டி துாக்கி சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்சில் கொண்டு சென்ற நிலையில் பாதிவழியில் இறந்தார்.
ராம்குமார் மாற்றுத்திறனாளி. அவருக்கு ஆதாரமாகிய விளங்கிய மனைவியும் இறந்தது கிராமத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது கிராமத்திற்கு கொடைக்கானல் அல்லது கும்பக்கரை மார்க்கமாக ரோடு வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.