ADDED : மே 06, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் பா.சந்தியா, வி.சரண்யாதேவி, சி.சத்யா, ச.ஷான்மதி, சு.சர்மிளா, கா.சோபிகா, ஜெ.சோனியா, ச.சொர்ணா, ஜீ.சுபிக்ஷா ஆகியோர் கிராமப்புற வேளாண் பணி திட்டத்தின்கீழ் வடமதுரையில் தங்கினர்.
இவர்கள் வடமதுரை ஏ.வி., பட்டி ரோட்டில் உள்ள துரையரசின் மக்காச்சோள வயலில் வீழ்ச்சி படை புழுவின் தாக்குதலை குறைக்க இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தி விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி கொடுத்தனர்.