/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடுப்பில்லா பூங்காவில் வன விலங்குகள் சுற்றுலா பயணிகள் அச்சம்
/
தடுப்பில்லா பூங்காவில் வன விலங்குகள் சுற்றுலா பயணிகள் அச்சம்
தடுப்பில்லா பூங்காவில் வன விலங்குகள் சுற்றுலா பயணிகள் அச்சம்
தடுப்பில்லா பூங்காவில் வன விலங்குகள் சுற்றுலா பயணிகள் அச்சம்
ADDED : ஜூலை 31, 2024 05:12 AM

கொடைக்கானல், : கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் சேதமடைந்துள்ள வளாக சுவரை கட்டமைக்காததால் வன விலங்குகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
குறிஞ்சியாண்டவர் கோயில் அருகே 5 ஏக்கரில் தோட்டக்கலைத்துறையின் செட்டியார் பூங்கா உள்ளது. நாள்தோறும் ஏராளமான பயணிகள் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர்.
வளாக சுவர் சேதமடைந்து பூங்காவின் பெரும் பகுதி திறந்த வெளியாக உள்ளது. இதனால் காட்டுமாடு, காட்டு பன்றி சுதந்திரமாக பூங்காவில் உலாவுகிறது. இரவில் சமூக விரோத செயல்களும் நடக்க வாய்ப்புள்ளது. பூங்காவில் உள்ள மலர் படுகை, அழகு தாவரங்கள் நாள்தோறும் வனவிலங்குகளால் சேதமடைகிறது. பூங்கா நிர்வாகம் வனவிலங்கு , இரவில் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்த தற்காலிகமாக நிழல் வலை போர்வை அமைத்துள்ளது.இதிலும் எளிதில் விலங்குகள் நுழையும் அவலம் உள்ளது. தோட்டக்கலைத்துறை பூங்காவின் பாதுகாப்பை அதிகரிக்க வளாக சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.