/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதி பெறாத மசாஜ் மையங்கள் பணம் பறிக்கும் கும்பலால் பாதிப்பு
/
அனுமதி பெறாத மசாஜ் மையங்கள் பணம் பறிக்கும் கும்பலால் பாதிப்பு
அனுமதி பெறாத மசாஜ் மையங்கள் பணம் பறிக்கும் கும்பலால் பாதிப்பு
அனுமதி பெறாத மசாஜ் மையங்கள் பணம் பறிக்கும் கும்பலால் பாதிப்பு
ADDED : பிப் 22, 2025 05:57 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் மையங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இங்குள்ள இயற்கை சுற்று சூழலை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள், இளைஞர்களை குறி வைத்து மசாஜ் மையங்கள் செயல்படுகின்றன.
முறையான அனுமதியின்றி காட்டேஜ், விடுதி, ஆயுர்வேத சிகிச்சை, ஸ்பா என்ற பெயரில் மசாஜ் மையங்கள் ஆங்காங்கே புற்றீசல் போல் செயல்படுகின்றன. அனுமதி பெறாத மையங்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இம் மையங்களில் நிர்ணியிக்கப்பட்ட கட்டணத்திற்கு உண்டான சேவைகள் வழங்கப்படாமல் பயணிகள் ஏமாற்றப்படும் போக்கு தொடர்கிறது. மசாஜ் மையங்களில் இளைஞர்களை போதை வஸ்துகளால் வசீகரப்படுத்தி பாலியல் ரீதியாக ஈர்ப்பு ஏற்படுத்தி பணம் பறிக்கும் நுாதனமும் அரங்கேறுகிறது. நகரில் குடியிருப்பு பகுதியில் செயல்படும் மையங்களால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
சுற்றுலா நகரில் இது போன்ற மையங்களால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. மைய செயல்பாடு குறித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய அறிவிப்பு பலகை ஏதுமில்லாத நிலை உள்ளது. மசாஜ் மையங்கள் குறித்த புகாரளிக்கும் நிலையில் போலீசார் கண்டுகொள்வதில்லை என சுற்றுலா பயணிகள் நொந்து கொள்கின்றனர். கொடைக்கானல் நகர் மட்டுமல்லாது மேல்மலை பகுதியிலும் மசாஜ் மையங்கள் செயல்படுகின்றன.
ஒருபுறம் போதை பொருட்கள் பயன்பாடு மற்றொரு புறம் மசாஜ் மையங்கள் என சுற்றுலா நகரில் தலைவிரித்தாடும் இத்தகைய போக்கை அதிகாரிகள் துளியும் கண்டுகொள்ளாது இச் செயல்பாடுகளுக்கு துணை போகின்றனர்.
அனுமதியின்றி செயல்படும் மசாஜ் மையங்கள்மீது போலீசார் கடுமை காட்டினால் மட்டுமே இத்தகைய போக்கு தவிர்க்கப்படும்.