/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறக்கப்படாத பூங்கா... மின்மயானத்தால் தொற்று; பரிதவிப்பில் திண்டுக்கல் 5வது வார்டு மக்கள்
/
திறக்கப்படாத பூங்கா... மின்மயானத்தால் தொற்று; பரிதவிப்பில் திண்டுக்கல் 5வது வார்டு மக்கள்
திறக்கப்படாத பூங்கா... மின்மயானத்தால் தொற்று; பரிதவிப்பில் திண்டுக்கல் 5வது வார்டு மக்கள்
திறக்கப்படாத பூங்கா... மின்மயானத்தால் தொற்று; பரிதவிப்பில் திண்டுக்கல் 5வது வார்டு மக்கள்
ADDED : செப் 15, 2024 12:56 AM

திண்டுக்கல் : சாக்கடைகளை துார்வாரததால் கழிவு நீர் தேக்கம், மழை நேரத்தில் வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவுநீர்,மின் மயானத்திலிருந்து வெளியேறும் புகையால் திணறும் மக்கள் என ஏராளமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநராட்சி 5 வது வார்டு மக்கள்.
ஆர்.எம்.காலனி, பிள்ளையார் பாளையம், எம்.கே.எஸ்.நகர்,எல்.ஐ.சி.,காலனி, மருதாணிக்குளம் , ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்தவார்டில் கொசுக்களால் மக்கள் பாதிக்கின்றனர். கொசு மருந்து அடிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர். வார்டில் உள்ள வடிகால்களை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்குகிறது. மழை நேரங்களில் தாழ்வான ரோடுகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் தேங்குகிறது. ஆர்.எம்.காலனி மின் மயானத்தில் தினமும் இறந்தவர்கள் உடலை எரிப்பதன் மூலம் இதிலிருந்து வெளியாகும் கரும்புகை அப்பகுதியை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீடுகளுக்குள் இப்புகை புகுந்து சுவர்களில் படிகிறது. இதை சுவாசிக்கும் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகும் நிலை தொடர்கிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு மின்மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களும்,மாடுகளும் ஹாயாக சுற்றித்திரிகின்றன. இதனால் மக்கள் அச்சப்படுகின்றனர். பிரச்னைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை .
பூங்காவை திறங்க
ராமசந்திரன்,ஆர்.எம்.காலனி 8 வது குறுக்கு தெரு: ஆர்.எம்.காலனி 8 வது குறுக்கு தெரு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. இப்பகுதியை சுற்றிய மக்கள் பொழுதுபோக்கிற்கு இடம் இல்லாமல் வீடுகளுக்குள் முடங்குகின்றனர். அதிகாரிகள் அவ்வப்போது வந்து ஆய்வு செய்கின்றனர். இருந்தாலும் பூங்கா திறக்காமல் உள்ளது.
துார்வாரத வடிகால்
ராஜசேகர்,ஆர்.எம்.காலனி 9 வது குறுக்கு தெரு: 9வது குறுக்கு தெரு பகுதிகளில் முறையாக சாக்கடைகள் துார்வாராமல் இருப்பதால் மணல்கள் தேங்கி புற்கள் முளைத்துள்ளது. மழை நேரங்களில் மழைநீர் செல்லாமல் அப்படியே தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. இதைக்கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்பாடில்லா தண்ணீர் தொட்டி
பாலகிருஷ்ணன்,ஓய்வு அரசு அதிகாரி, ஆர்.எம்.காலனி 9வது குறுக்கு தெரு: ஆர்.எம்.காலனி பகுதி மெயின்ரோட்டில் மின் மயானம் உள்ளது. இங்கு தினமும் இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவி தொற்று நோய்களை பரப்புகின்றன.
அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்தி விபத்துக்கள் ஏற்படும் முன் மின் மயானத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புகை வெளியாகும் குழாயை இன்னும் உயராக அமைக்க வேண்டும். இங்குள்ள தண்ணீர் தொட்டியும் பயன்பாடில்லாமல் உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
சுவாதி, கவுன்சிலர் (தி.மு.க.,): ஆர்.எம்.காலனி மாநகராட்சி பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மின் மயானத்தை மாற்றுவதற்கு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அடிக்கடி துாய்மை பணியாளர்கள் மூலம் வார்டுகளில் உள்ள தெருக்கள் சுத்தம் செய்யப்படுகிறது என்றார்.