ADDED : ஜூலை 15, 2024 04:46 AM

செந்துறை ; செந்துறை நல்லபிச்சம்பட்டி புனித உத்திரைய மாதா சர்ச் திருவிழாவில் கொடி ஊர்வலம் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
செந்துறை கத்தோலிக்க கிறஸ்தவ பங்கு ஆலயம் உள்ளது. கிளைப்பங்கு நல்லபிச்சன்பட்டியில் புனித உத்திரியமாதா ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து புதிய கொடியானது அர்ச்சிக்கப்பட்டு பவனியாக நல்லபச்சன்பட்டி சர்ச்சிற்கு கொண்டு சென்று தொடர்ந்து புதிய மரத்தில் கொடியேற்றி ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சர்ச்சில் நவநாள் திருப்பலி நடக்கிறது. இன்று உத்திரியமாதா வேண்டுதல் பொங்கல் வைத்தல்,இரவு தேர்பவனியும் நடக்கிறது. ஜூலை 16ல் பொதுபொங்கல்,திருப்பலியை திருச்சி தென்கிழக்கு மாகான தலைவர் பேட்ரிக் ஜெயராஜ்,பாதிரியார்கள் இணைந்து திருவிழா ஆடம்பர பாடல் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
அன்று இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கையும்,தாரைதம்பட்டங்கள் முழங்க உத்திரியமாதா அன்னையின் தேர் பவனி,புனிதர்களின் 5 சப்பர தேர் பவனிகள் நடக்கிறது. அன்பின் விருந்து நடக்கிறது. ஜூலை 17ல் மாலை புனிதர்களின் தேர்பவனியும், திப்பலியும்,கொடியிறக்கத்துடன் திருவிழா முடிகிறது.