ADDED : ஆக 16, 2024 05:07 AM
*வடமதுரை: ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பி.தனலட்சுமி கொடியேற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, பி.டி.ஓ., நளினா, ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி, துணைத்தலைவர் கே.தனலட்சுமி பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பத்மலதா முன்னிலையில் தலைவர் நிருபாராணிகணேசன் கொடியேற்றினார். தி.மு.க., நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர். வடமதுரை கலைமகள் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ஆர்.கே.பெருமாள், குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா, கலைமகள் மழலையர் துவக்கப் பள்ளியில் இயக்குனர் அருள்மணி, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொடியேற்றினர். தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ முன்னிலையில் பி.டி.ஏ., தலைவர் நரசிங்கன் கொடியேற்றினார். கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வயநமசி முன்னிலையில் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் கொடியேற்றினார்.
*அய்யலுார்: பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் கொடியேற்றினார். செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து, எழுத்தர் மோகன் பங்கேற்றனர். அய்யலுார் ரஞ்சித் மழலையர் துவக்கப் பள்ளியில் முதல்வர் மனோரஞ்சித் தலைமையில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார். அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் திருமாறன் தேசிய கொடியேற்றினார். அய்யலுார் தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குனர் சாந்தி முன்னிலையில் பள்ளி தாளாளர் ஸ்ரீதரன் கொடியேற்றினார்.
-*எரியோடு: பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். செயல் அலுவலர் சையது அபுதாகிர், தி.மு.க., நிர்வாகிகள் செந்தில்குமார், கார்த்திகேயன் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நிர்மலா முன்னிலையில் பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முருகன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் லட்சுமி கொடியேற்றினர். கலைவாணி மழலையர் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆபிரகாம் முன்னிலையில் நிறுவனர் சாவித்திரி கொடியேற்றினார். கோவிலுார் தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாளாளர் கிருஷ்ணவேணி முன்னிலையில் முதல்வர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். புதுரோடு இ.என்.பி., மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் இளங்கோவன் கொடியேற்றினார். முதல்வர் ராமசந்திரபிரபு, ஒருங்கிணைப்பாளர் லிஸி முன்னிலை வகித்தனர்.