ADDED : மார் 03, 2025 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி பஸ் ஸ்டாண்ட் வேல் ரவுண்டானா பகுதியில் திருப்பூரிலிருந்து பழநி நோக்கி அரசு பஸ் வந்தது.
அதே சமயத்தில் வேல் ரவுண்டானா அருகே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் சேர்ந்த பக்தர்கள் பழநி முருகன் கோயிலுக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு வேனில் திரும்பினர். அரசு பஸ் பிரேக் பிடிக்காததால் வேனில் மோதியது. வேன் அருகே வந்த, பகவான் கோயில் நோக்கி சென்ற அரசு பஸ் உரசி நின்றது.
2 பஸ்சுக்கும் நடுவே சிக்கி வேன் சேதம் அடைந்தது. வேனை சாமிவேல் 50, ஓட்டிய நிலையில் 4 பேர் காயமடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.