/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வத்தலக்குண்டு....சுதந்திர தின விழா
/
வத்தலக்குண்டு....சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 05:08 AM
*வத்தலக்குண்டு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பரமேஸ்வரி முருகன் கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், முனியாண்டி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முத்து வரவேற்றார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சிதம்பரம் கொடியேற்றினார். செயல் அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார். கூட்டுறவு நகர வங்கியில் செயலாட்சியர் மருதுபாண்டி கொடி ஏற்றினார். மேலாளர் வினோதினி முன்னிலை வகித்தார். சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் நாகரத்தினம் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க தலைவர் வெற்றிச்செல்வன் கொடியேற்றினார். செயலாளர் மனோதீபன், பொருளாளர் மனோகரன் பங்கேற்றனர். மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் நோரீஸ் நடராஜன் கொடியேற்றினார். முதல்வர் ஆத்தியப்பன் முன்னிலை வகித்தார். மவுண்ட் சீயோன் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் பிரசன்னதேவி வரவேற்றார். தாளாளர் லின்னி நோரீஸ் கொடியேற்றினார்.
*பட்டிவீரன்பட்டி: சேவகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். தலைவர் வனிதா தங்கராஜன் கொடியேற்றினார். செயலாளர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். பட்டிவீரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். தலைவர் சியாமளா கொடியேற்றினார். துணைத் தலைவர் கல்பனா தேவி அருண்குமார் பங்கேற்றனர். பட்டிவீரன்பட்டி என். எஸ். வி. வித்யாசாலா தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். தலைவர் காமராஜ் கொடியேற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். செயலாளர் செந்தில்குமரன் வரவேற்றார்.
*நிலக்கோட்டை: தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தனுஷ்கோடி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ரெஜினா நாயகம் கொடி ஏற்றினார். ஒன்றிய ஆணையாளர் பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பஞ்சவர்ணம் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சுபாஷினிபிரியா கதிரேசன் கொடியேற்றினார். பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன், செயல் அலுவலர் மோகன் குமார் பங்கேற்றனர்.

