ADDED : ஆக 13, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : கடந்த 2020 ---21,22,23 கல்வி ஆண்டுகளுக்கான 11,12ம் வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ஆதார் இணைப்பு இணையவழி வாயிலாக கல்வி ஊக்கத்தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு முகவரி மூலம் காசோலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, வி.சி.க., சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் மைதீன்பாவா தலைமை வகித்தார். முற்போக்கு மாணவர்க கழக மாநில துணைச் செயலர் மணிகண்டனர் முன்னிலை வகித்தார். வி.சி.க., மாவட்ட துணை அமைப்பாளர் திருச்சித்தன், மண்டல துணைச் செயலர் அன்பரசு, நிர்வாகிகள் பாபு, இருதயராஜ் பங்ேகற்றனர்.

