/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் காய்கறி விலை தொடர் சரிவு
/
மழையால் காய்கறி விலை தொடர் சரிவு
ADDED : ஆக 03, 2024 12:15 AM
ஒட்டன்சத்திரம்:கேரள மழையால் வியாபாரிகள் கொள்முதல் அளவை குறைத்ததால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் காய்கறிகளில் 70 சதவீதத்தை கேரள வியாபாரிகள் வாங்குகின்றனர். 30 சதவீத காய்கறிகளை தமிழக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் விற்பனை மந்தமாக இருப்பதால் வியாபாரிகள் காய்கறிகள் வாங்கும் அளவை மிகவும் குறைத்து விட்டனர். இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கிலோ ரூ.19 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ. 15, ரூ.43க்கு விற்ற முருங்கை ரூ.40, ரூ. 26 க்கு விற்ற பீட்ரூட் ரூ. 22, ரூ.7 க்கு விற்ற சுரைக்காய் ரூ.5, ரூ.20 க்கு விற்ற பச்சைப்பயறு ரூ.12 க்கு விற்றது. இதேபோல் ரூ. 50 க்கு விற்ற தக்காளி ரூ.21க்கு விற்பனையானது.
கேரளாவில் மழை நின்றால் காய்கறிகள் விலை ஏற வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.