ADDED : ஆக 26, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்:
வேடசந்துார் ஆத்து மேட்டில் தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து, கட்சி கொடி ஏற்றி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
பேரூர் செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொருளாளர் திருமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், தமிழ்குமரன் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனபால் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் கட்சிக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.