ADDED : ஆக 22, 2024 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரையில் ஏ.வி.பட்டி ரோடு சங்கர்களம் யோக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன.
நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. மங்கம்மாள்கேணி பக்த ஆஞ்சநேயர் கோயில் தலைமை அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். கவுன்சிலர்கள் கணேசன், மருதாம்பாள், தே.மு.தி.க., செயலாளர் பாலமுருகன், முன்னாள் தலைவர் பார்த்தசாரதி பங்கேற்றனர்.