/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பார்வையற்ற மூதாட்டிக்கு ஒளி கொடுத்த தன்னார்வலர்கள்
/
பார்வையற்ற மூதாட்டிக்கு ஒளி கொடுத்த தன்னார்வலர்கள்
பார்வையற்ற மூதாட்டிக்கு ஒளி கொடுத்த தன்னார்வலர்கள்
பார்வையற்ற மூதாட்டிக்கு ஒளி கொடுத்த தன்னார்வலர்கள்
ADDED : ஆக 12, 2024 12:36 AM

சாணார்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி விராலிபட்டியில் பார்வையற்ற மூதாட்டிக்கு தன்னார்வலர்கள் இணைந்து இலவசமாக வீடு கட்டி அதை நேற்று திறந்து வைத்தனர்.
சாணார்பட்டி விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் மருதம்மாள் 75. இவருக்கு இரு கண் பார்வையும் இல்லை. ஆதரவின்றி ஏழ்மையான நிலையில் வாழ்கிறார். இவர் வீடு சேதமடைந்து ஆபத்தாக இருந்தது. இதையறிந்த சமூக ஆர்வலர் பால் தாமஸ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து மருதம்மாளுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்தனர்.
உறவின் சந்திப்பு தமிழக இளைஞர் பாராளுமன்ற குழுவினர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் திரட்டி புதிய வீட்டை கட்டினர். வீட்டின் திறப்பு விழா நேற்று நடந்தது. மதுரை முன்னாள் வணிகவரி இணை ஆணையர் தேவநாதன், அனுகிரக கல்லுாரி முன்னாள் முதல்வர் ஐசக், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சத்பதி வீட்டை திறந்து மருதம்மாளிடம் ஒப்படைத்தனர்.
பால்தாமஸ், சுகாதார ஆய்வாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ வீரர்கள் விஸ்வாசம், மாறவர்மன், சி.ஐ.எஸ்.எப்., வீரர் ஜெயராஜ், தன்னார்வலர்கள் குமார், சரவணன், தினேஷ், சகாய பிரபாகர் பங்கேற்றனர்.

