/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடியிருப்பில் கழிவுகள்; தொற்று பரவலால் அவதி; கொடைக்கானல் 11 வது வார்டில் தொடரும் அவலம்
/
குடியிருப்பில் கழிவுகள்; தொற்று பரவலால் அவதி; கொடைக்கானல் 11 வது வார்டில் தொடரும் அவலம்
குடியிருப்பில் கழிவுகள்; தொற்று பரவலால் அவதி; கொடைக்கானல் 11 வது வார்டில் தொடரும் அவலம்
குடியிருப்பில் கழிவுகள்; தொற்று பரவலால் அவதி; கொடைக்கானல் 11 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : ஆக 31, 2024 05:49 AM

கொடைக்கானல், : குடியிருப்பில் விடுதி கழிவுகள் வருவதால் தொற்று பரவலால் கொடைக்கானல் நகராட்சி 11 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், அந்தோணியார் சர்ச் தெரு, சலேத் மாதா சர்ச் பகுதி, உட்வில் ரோடு, செம்மேரிஸ் ரோடு,நாய்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் புதிதாக அமைத்த ரோடு சேதமடைந்ததால் மக்கள் பாதிப்பு தொடர்கிறது , காட்டு மாடு நடமாட்டத்தால் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுலாபயணிகளும் அச்சத்தில் உள்ளனர். , தாராளமாக விற்கப்படும் போதை பொருட்களால் போதை நபர்களின் தொல்லை அதிகம் உள்ளது. சாக்கடை கட்டமைப்பு இல்லாத சூழலால் தொற்று பரவலும் அதிகம் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு தொடர்கிறது . பயணிகளும் பாதிக்கின்றனர். குடியிருப்பில் விடப்படும் செப்டிக் டேங்க் கழிவால் சுற்றுசுழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது . இது போன்ற பிரச்னைகளால் வார்டு மக்கள் தினம் தினம் அவதிப்படுகின்றனர் .
தெருவிளக்கு எரிவதில்லை
ஷீலா,குடும்பத் தலைவி : அந்தோணியார் சர்ச் தெரு பகுதிக்கு அருகில் உள்ள தனியார் விடுதியின் செப்டிக் டேங்க் கழிவு சாக்கடையில் நேரடியாக கலப்பதால் துர்நாற்றம் வீசி முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குப்பை சரிவர அள்ளப்படாத நிலை உள்ளது. அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. தெருவிளக்குகளும் எரிவதில்லை. அந்தோணியார் சர்ச் தெரு பகுதியில் உள்ள பழைய ஊற்று நீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
வாகனங்களால் இடையூறு
ஆரோக்ய ஆனந்த், வெல்டிங் கான்ட்ரக்டர் : முக்கிய பங்கு வகிப்பது பஸ் ஸ்டாண்ட் . இதில் பஸ்களை தவிர்த்து தனியார் வாகனங்கள், டிராவல்ஸ், நகராட்சி காலாவதி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் இடையூறு ஏற்படுகிறது. பஸ்களை தவிர்த்து இதர வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். உட்வில் ரோடு ஒருவழிப்பாதையாக உள்ள நிலையில் ரோட்டோரம் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கிறது. சாக்கடைகளின் மேல் அமைக்கப்பட்டுள்ள மேல் தளங்கள் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தங்கும் விடுதிகளில் இஷ்டம் போல் கழிவுநீர் திறந்து விடும் நிலை உள்ளது.
தேவை சிசிடிவி கேமரா
செல்வம், எலக்ட்ரீசியன் : முக்கிய ரோடுகளில் கால்நடைகள் இடைமறித்து நிற்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வார்டில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். தெருநாய்கள் அதிகரிப்பால் அனைத்து தரப்பினருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு மகளிர் உதவித்தொகை பெரும்பாலானவருக்கு வழங்காத நிலை உள்ளது. ரேஷன் கடையில் பருப்பு, அரிசி உள்ளிட்டவை முறையான சப்ளை இல்லாமல் உள்ளது.
கழிவு நீரை ஒழு ங்குபடுத்த நடவடிக்கை
இருதயராஜா, கவுன்சிலர், (அ.தி.மு.க.,): ரூ. 16 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. பட்டா இல்லாதவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்டு மாடுகளை கட்டுப்படுத்த வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழிவு நீரை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வட்டக்கானல் பாம்பார் புரம் ரோடு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சலேத் மாதா சர்ச் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் கழிவு நீர் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தப்படும் என்றார்.