ADDED : மே 15, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் 2வது வின்சின் ரோப் மாற்றப்பட்டது.
பழநி முருகன் கோயில் சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வின்ச்கள் மூன்று உள்ளன. வின்ச்சில் மேல் தளத்தில் உள்ள இயந்திரத்தில் இருந்து வின்ச் பெட்டிகளை இணைக்கப்பட்டுள்ள ரோப் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்படுகிறது. இந்நிலையில் 2வது வின்ச்சின் ரோப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்பு 2ம் வின்சில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

