/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேசிய போட்டிக்கு மகளிர் அணி வழியனுப்பு விழா
/
தேசிய போட்டிக்கு மகளிர் அணி வழியனுப்பு விழா
ADDED : ஆக 02, 2024 06:35 AM

திண்டுக்கல் : தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக மகளிர் அணியினை வழியனுப்பும் விழா திண்டுக்கல்லில் நடந்தது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான ஜூனியர் மகளிருக்கான கால்பந்து போட்டிகள் ஆந்திராவின் அனந்தபூரில் ஆக. 20 வரை நடக்க உள்ளது.
தமிழகஜூனியர் மகளிர் கால்பந்து அணிக்கான வீராங்கனைகள் தேர்வு ஜூலை 26,27 ல் நடந்தது.நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரியில் நடந்த இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 189 வீராங்கனைகள் கலந்து கொண்டதில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முகாம் நடந்தது. தமிழக ஜூனியர் மகளிர் கால்பந்து அணிக்கான 22 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த அணி நேற்று முன்தினம் திண்டுக்கல்லிருந்து அனந்தபூர் சென்றது. தேசிய போட்டியில் பங்குபெற உள்ள தமிழக அணியினை சீருடை வழங்கி வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.
மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன், நிர்வாக குழு உறுப்பினர் பசீர் அகமது, செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் ரமேஷ் பட்டேல், பொருளாளர் கலைச்செல்வன், துணை செயலாளார்கள் ஈசாக்கு, தங்கதுரை கலந்து கொண்டனர். 22 பேர் கொண்ட குழுவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகிலா, ஷாரன் இடம் பெற்றுள்ளனர்.