/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாராகி அம்மன் கோயில்களில் வழிபாடு
/
வாராகி அம்மன் கோயில்களில் வழிபாடு
ADDED : மே 13, 2024 05:54 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள்நடந்தது.
திருமாலின் வாராக அம்சமாக கருதப்படும் வாராகி அம்மன் சப்த கன்னியரில் ஒருவராகவும் திகழ்கிறார். பஞ்சமிநாட்கள் வராகி அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
திண்டுக்கல் கிழக்கு ரத வீதி ஜான் பிள்ளை சந்தில்வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
நவராத்திரி, பஞ்சமி உள்ளிட்ட விஷேச நாட்களில் ஏராளமானபக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். இந்நிலையில் நேற்று வளர்பிறை, கருட, நாக பஞ்சமிகள் அனைத்தும்ஒரே நாளில் வந்ததால் சிறப்பு யாகங்கள் நடந்தது.
தொடர்ந்து மஞ்சள், தேங்காய், இளநீர், பால், எலும்பிச்சை,தயிர், மஞ்சள் - குங்குமம், திருமஞ்சனம் என 10 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சிறப்புஅலங்காரத்துடன் அம்மன் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாணார்பட்டி:வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி வளர்பிறை பஞ்சமி யாக பூஜை நடந்தது. முன்னதாக வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். வளர்பிறை பஞ்சமி யாக பூஜையை வாராகி அறக்கட்டளை தலைவரும்,வரசித்தி வாராகி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் நடத்தினார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.