/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு
/
வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு
ADDED : ஆக 04, 2024 10:56 PM

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு பங்காளிகள் அழைப்புடன் விழா துவங்கியது. நேற்று அதிகாலை பாரம்பரிய வழிபாடுகள் முடித்தது. விரதமிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் கோவில் முன் அமர்ந்தனர்.
பூஜாரி லோகநாதன் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். பின், சேர்வைகாரர்களிடம் பக்தர்கள் சாட்டையடி பெற்று, கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் முருகேசன், செயலர் மீர்ராஜ், பொருளாளர் பெருமாள் செய்தனர்.