/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில்களில் குரு பெயர்ச்சி வழிபாடு
/
கோயில்களில் குரு பெயர்ச்சி வழிபாடு
ADDED : மே 02, 2024 06:19 AM

திண்டுக்கல்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு திண்டுக்கல் சுற்றுப்புறங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
மேஷ ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.
இதனையொட்டி திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாஜனம், கலச பூஜை நடத்தப்பட்டு, காலை 10:00 மணிக்கு யாக வேள்வி தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி நடத்தப்பட்டு, தட்சிணாமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தைத் தொடர்ந்து, சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டு யாக பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அபிராமி அம்மன் கோயில், நாகல்நகர் தட்சிணாமூர்த்திக் கோயில், பொன்னழகு காளியம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரர் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வர் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் குரு பெயர்ச்சி வழிபாடுகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்திலுள்ள ஸ்ரீவித்யா தக்ஷிணாமூர்த்தி கோயில்,திண்டுக்கல் சத்திரம் தெரு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டியில் நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக முருகன் கோயில் உள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு விசேஷ யாகசாலை பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி: சோமலிங்க சுவாமி கோயில் கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி விலக்கு பிச்சை சித்தர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.
இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பக்தர்கள் மிளகு, தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

