sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் யோகா தினம் கொண்டாட்டம்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் யோகா தினம் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் யோகா தினம் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் யோகா தினம் கொண்டாட்டம்


ADDED : ஜூன் 22, 2024 06:07 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லுாரிகள், பொது அமைப்புகள் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவம்,ஓமியோபதி துறை சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் யோகாசன பயிற்சி நடந்தது. திண்டுக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அமுதா தலைமை வகித்தார். டாக்டர்கள் தேவராஜ்,வசந்தகுமார் முன்னிலை வகித்தனர். செவிலியர், மாணவர்களுக்கு பல்வேறு வகையான யோகா பயிற்சி நடந்தது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அறங்காவலர் குழு சார்பாக அர்ச்சகர்கள்,பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி யோகா பயிற்சி அளித்தார்.

திண்டுக்கல் ஜி. டி. என்.கலைக்கல்லுாரியில் உடற்கல்வித்துறை சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் டாக்டர் க.ரெத்தினம், செயலாளரர் துரை ரெத்தினம் தலைமை வகித்தனர். உடற்கல்வி தறை தலைவர ராஜசேகர் வரவேற்றார் .கல்லுாரி முதல்வர் சரவணன் . சரண்யா ஸ்ரீ தர்ஷனா , விவேகானந்தா யோகா பயிற்சி நிலைய மேலாளர் ரவிக்குமார், அறிவித்திருக்கோவில் ரெங்கநாயகி ,ஹாட் புல்நெஸ் திண்டுக்கல் மைய ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி பாபு பேசினர். கல்லுாரி கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன் ,சுயநீதிவு பிரிவின் துணை முதல்வர் நடராஜன், ஜி டி என் இயற்கை யோகா கல்லுாரி முதல்வர் தீபா கலந்து கொண்டனர். துறைத்தலைவர் ஜெயராமன் நன்றி கூறினார்.

தாடிக்கொம்பு: ஸ்ரீ குருமுகி வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்கள் யோகா செய்து காட்டினர். இவர்களை பள்ளி தாளாளர் திவ்யா, நிர்வாகி செந்தில் குமார், முதல்வர் சியாமளா பாராட்டினர்.

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் சுகுமார் வரவேற்றார். சிங்கப்பூர் பட்டய கணக்காளர் சொக்கலிங்கம்பிரகாசம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மத்திய ஆயுஷ் அமைச்சக நெறிமுறைப்படி, யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

கஸ்துாரிபா சேவிகாசிரமம், சிறப்பு மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம், சின்னாளபட்டி பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி நன்றி கூறினார்.

நத்தம் : ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களின் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்யப்பட்டது. பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன், இண்டர்நேஷனல் பள்ளி நிர்வாக அதிகாரி தையல்நாயகி கலந்து கொண்டனர். நத்தம் நீதிமன்ற வளாகத்தில் ஊழியர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

--ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரங்கசாமி, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான யோகா பயிற்சிகளை அளித்தார்.

அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு வகையான யோகாசனங்களை செய்தனர். நிர்வாகி புருசோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் , செயலர் பட்டாபிராமன், முதல்வர் சவுமியா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் புனிதா வரவேற்றார். மாவட்ட டபிள்யூ.சி.எஸ்.சி ஜோனல் செகரட்டரி பாலசுந்தர், இணை உதவியாளர்கள் சண்முகப்பிரியா, சிலம்பரசி யோகா பயிற்சி அளித்தனர். அறிவியல் துறை பேராசிரியர் சகாய கிரிஜா நன்றி கூறினார். கணினி அறிவியல் துறை தலைவர் கவிதா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் வாசுகி வழிகாட்டுதலின் பேரில் ஆடை வடிவமைப்புத் துறை தலைவர் பேராசிரியர் கோமதி தலைமை வகித்தார். சங்கர் பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் யமுனாதேவி நன்றி கூறினார்.

காப்பிலியம்பட்டி கல்வி மெட்ரிக் பள்ளியில் பொற்சபை நிறுவனர் மெய்தவம் பயிற்சி அளித்தார். பள்ளி முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் மங்கையர்க்கரசி, மூத்த ஒருங்கிணைப்பாளர்கள் காளிதாஸ், செல்வி, சிலம்பரசி கலந்து கொண்டனர்.

கள்ளிமந்தையம்: திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் ஒட்டன்சத்திரம் மணவாளக் கலை மன்றம் சார்பாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் குப்பமுத்து வரவேற்றார். மனவளக்கலை பேராசிரியர் பூரண சந்திரன், மன்ற பேராசிரியர்கள் பொங்கி எனன் தனுஷ்கோடி கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் தெய்வநாயகி, சுந்தரமகேஸ்வரி யோகாசனம் செய்து காட்டினார். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேல் நன்றி கூறினார்.

காளாஞ்சிப்பட்டியில் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் நடந்த இதில் ஒன்றிய தலைவர் ருத்ரமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு ஒன்றிய தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். ஊரக உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் சின்ராஜ், சிந்தனையாளர் பிரிவு ஒன்றிய தலைவர் சந்தன சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் சரவணகுமார், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு ஒன்றிய தலைவர் காளீஸ்வரன், இளைஞர் அணி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பிரவீன் ரஞ்சித், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜகோபால் கலந்து கொண்டனர்.

பழநி:பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர் யோகாசன பயிற்சி செய்தனர். யோகா பயிற்சியாளர்கள் முருகன், தமிழ் நாயகன், பாபு, முதல்வர் ஆனந்தி கலந்து கொண்டனர்.பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், அலுவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

தேவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதல்வர் சேகர், தாளாளர் ஞானம் உள்ளிட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவிகள் யோகா சின்னம் வடிவில் நின்று யோகா பயிற்சியினை மேற்கொண்டனர். தலைமை ஆசிரியர் அருள்ஜோதி துவங்கி வைத்தார். பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் கந்தசாமி தலைமையில் நாட்டு நலப்பணி மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us