/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூட்டிய வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
/
பூட்டிய வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூலை 07, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வாழைக்காய்பட்டி பிரிவு வாசிமலை நகரைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரின் மனைவி சுமதி 44.
இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அவரது அம்மா கிருஷ்ணவேணியுடன் 70, திண்டுக்கல்லில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். நேற்று வீட்டிற்கு திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே பீரோவில் வைத்திருந்த வளையல், செயின், நெக்லஸ் உள்பட13 பவுன் நகையை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.