/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடுத்தடுத்து 3 வீடுகளில் 10 பவுன் கொள்ளை
/
அடுத்தடுத்து 3 வீடுகளில் 10 பவுன் கொள்ளை
ADDED : டிச 05, 2024 11:18 PM
தொப்பம்பட்டி: பழநி அருகே அடுத்தடுத்து ௩ வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் 10 பவுன் நகைகளை கொள்ளயடித்து சென்றனர்.
பழநி அம்மாபட்டி அருகே உள்ள நாச்சியப்பன் கவுண்டன் வலசை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார் 32. நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவை உடைத்து உள் புகுந்த கொள்ளை கும்பல் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகையை திருடியது. மேலும் அதே தெருவில் உள்ள கார்த்திகேயன் 35, குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிய போது உள்ளே புகுந்த அக்கும்பல் பீரோவிலிருந்த இரண்டு பவுன் நகைகள், அடுத்துள்ள வஞ்சாத்தாள் 56, மகள் ராகவி 27, வீட்டில் துாங்கியதை பயன்படுத்தி அவர்களது கழுத்திலிருந்த ஏழு பவுன் செயினை கொள்ளையடித்தனர்.
கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. எஸ்.பி., பிரதீப் கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.