/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க.,வில் சேர வேலை நேரத்தில் வேனில் சென்ற 100 நாள் ஊழியர்கள்
/
தி.மு.க.,வில் சேர வேலை நேரத்தில் வேனில் சென்ற 100 நாள் ஊழியர்கள்
தி.மு.க.,வில் சேர வேலை நேரத்தில் வேனில் சென்ற 100 நாள் ஊழியர்கள்
தி.மு.க.,வில் சேர வேலை நேரத்தில் வேனில் சென்ற 100 நாள் ஊழியர்கள்
ADDED : நவ 21, 2024 01:35 AM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வேலை நேரத்தில் தி.மு.க.,வில் சேர சென்ற 100 நாள் திட்ட பணியாளர்கள் மீது ஏ.பி.டி.ஒ., நடவடிக்கை எடுத்துள்ளார்.
மோர்பட்டி ஊராட்சியில் சில பகுதிகளில் மகாத்மாகாந்தி ஊரக வேலையுறுதி திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் திட்ட பணி நடக்கிறது. இந்நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த 20க்கு மேற்பட்ட பணியாளர்களை தி.மு.க., வில் சேர்க்கும் நோக்கில் அக்கட்சி பிரமுகரான ஊராட்சி தலைவர் சிவசக்தி வேனில் மாவட்ட நிர்வாகிகளிடம் அழைத்து சென்றார்.
இதுதொடர்பாக அப்பகுதியினர் ஒன்றிய ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணியனிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மோர்பட்டி ஊராட்சியில் 100 நாள் திட்ட பணியாளர்கள் வருகைப்பதிவு, தளத்தில் பணியில் இருப்போர் குறித்து ஏ.பி.டி.ஓ., ஆய்வு நடத்தினார்.
வடமதுரை ஒன்றிய தலைவர் தனலட்சுமி கூறுகையில், ''பொதுமக்களின் புகாரையடுத்து ஏ.பி.டி.ஓ., ஆய்வு நடத்தியதில் சிலர் பணி நேரத்தில் அங்கு இல்லாததை கண்டுபிடித்தார். அவர்களது வருகைப்பதிவை ரத்து செய்ததுடன் அடுத்து 5 நாட்களுக்கு பணி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்'' என்றார்.

