ADDED : ஜூலை 30, 2025 06:20 AM
திண்டுக்கல்; கோயமுத்துார் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திவந்த 11 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.
கோயமுத்துார் - நாகர்கோவில் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குகிறது. காலை 8:00 மணிக்கு கோயம்புத்துாரில் இருந்து புறப்படும் ரயில் இரவு 7:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.இந்நிலையில் நேற்று (ஜூலை 29) காலை கோயம்புத்துாரிலிருந்து நாகர்கோவில் புறப்பட்ட ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மதியம் 1:35 மணிக்கு திண்டுக்கல் வந்த ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் பைகளில் 11 கிலோ கஞ்சா இருப்பதை கண்டனர் .
அதை பறிமுதல் செய்த போலீஸ் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.கஞ்சா கடத்திய நபர்கள் குறித்து சி.சி.டி.வி., கேமரா பதிவு படி ரயில்வே போலீஸ் விசாரிக்கின்றனர்.

