/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு
/
பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு
ADDED : அக் 26, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பஸ்சில் பயணித்த பெண்ணின் கைப்பையில் இருந்த 12 பவுன் நகை திருடு போனது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கார்கில் நகரை சேர்ந்தவர் பரிமளா 42. நேற்று முன்தினம் ஊரில் இருந்து திண்டுக்கல் வந்த அரசு பஸ்சில் கைப்பையை தோளில் மாட்டிய படி நின்று கொண்டு பயணம் செய்தார்.
வடமதுரையில் பஸ் நின்றபோது கைப்பையை பார்த்த போது உள்ளே வைத்திருந்த 12 பவுன் எடை கொண்ட 2 தங்கச் செயின்கள் திருடு போயிருந்தது தெரிந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

