/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.1.20 கோடி மோசடி 5 பேர் மீது வழக்கு
/
ரூ.1.20 கோடி மோசடி 5 பேர் மீது வழக்கு
ADDED : அக் 18, 2024 03:23 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் போல் போலி கையெழுத்திட்டு ரூ.1.20 கோடி மோசடியில் ஈடுபட்ட பங்குதாரர், ஊழியர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
கொடைக்கானலை சேர்ந்தவர் பிருந்தா 34. இவர் இங்கு அண்ணாசாலை ரோட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்துகிறார். இவருடன் பங்குதாரராக அதே ஊர் ராஜாசெல்வம் 35, சேர்ந்தார். 2022ல் பிருந்தாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. சூர்ப்பர் மார்க்கெட் கணக்குகளை ராஜாசெல்வம் கவனித்தார். அப்போது ராஜாசெல்வம்,அவரது தம்பி ராஜாபிரசாத், சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய அதே பகுதியை சேர்ந்த பெண் ஊழியர் ராமதிலகம், அவரது கணவர் மணிகண்டராஜ்,நண்பர் சபரீஷ்குமார் ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து வங்கி 'செக்' உள்ளிட்டவற்றில் பிருந்தாவை போல் போலியாக கையெழுத்திட்டு அவருக்கு தெரியாமல் ரூ.1.20 கோடி மோசடியில் ஈடுபட்டனர்.
பிருந்தாவிற்கு இந்த விவகாரம் தெரியவர திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்.ஐ.,கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் ராஜாசெல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.