/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
20 நாளில் 140 நாய்களுக்கு கருத்தடை
/
20 நாளில் 140 நாய்களுக்கு கருத்தடை
ADDED : ஜன 09, 2025 05:32 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்று ப்பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 20 நாட்களில் 140 நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகர், புறநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெறி நாய்களும் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்தன.
இதனால் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் நாய் கடிக்கு சிகிச்சை பெற பொது மக்கள் வரத் துவங்கினர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி திருச்சியை சேர்ந்த தனியார் டிரஸ்ட் ஒன்றிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு தெருநாய்களை பிடித்தல், கருத்தடை ஆப்பரேஷன் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள விலங்குகள் இனப்பெருக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதை நேற்று மேயர் இளமதி, கமிஷ்னர் ரவிச்சந்திரன், மாநகர நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் கருத்தடை ஆப்பரேஷன் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மாநகர அலுவலர் ராம்குமார் கூறியதாவது : 20 நாட்களாக தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 140 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 3000 ஆயிரம் நாய்கள் வீதம் இருக்க வேண்டும்.
அதன்படி திண்டுக்கலில் மக்கள் தொகை அடிப்படையில் 2.50 லட்சம் வரையில் உள்ளனர். 8 ஆயிரம் நாய்கள் வரை இருக்கலாம். 2 ஆண்டிற்குள் அந்த இலக்கை எட்டிவிடும் நோக்கில் பணிகள் தொடங்கி உள்ளன என்றார்.